×

குப்பைமேட்டில் சாராயம் : காய்ச்சியவர் சிக்கினார்

திருவள்ளூர்: ஊரடங்கு உத்தரவால் டாஸ்மாக் கடைகள் முழுவதுமாக மூடப்பட்டுள்ளது. இதனால் தமிழகத்தில் கள்ளத்தனமாக மதுபானம் விற்பனை அமோகமாக நடைபெற்று வருகிறது. 110க்கு விற்கப்பட்டு வந்த குவார்ட்டர் பிராந்தி தற்போது ₹700 வரையில் கள்ளச் சந்தையில் விற்பனையாகிறது.
ஒருபக்கம் ஊரடங்கு உத்தரவால், வருமானம் இல்லாமல் தவித்து வரும் மதுப்பிரியர்கள், அதிக விலை கொடுத்து மதுவை வாங்க முடியாததால், கள்ளச்சாராயத்தை வாங்கி அருந்த தொடங்கியுள்ளனர். இதையடுத்து திருவள்ளூர் மாவட்டத்தில் பலர் கள்ளச்சாராயம் காய்ச்சி விற்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், திருவள்ளூர் பெரும்பாக்கம் குப்பைமேட்டில் அடுப்பு வைத்து கள்ளச்சாராயம் காய்ச்சுவதாக எஸ்.பி., அரவிந்தனுக்கு நேற்று முன்தினம் தகவல் வந்தது. அவரது உத்தரவின்பேரில், மதுவிலக்கு அமல் பிரிவு இன்ஸ்பெக்டர் சத்தியவாணி, எஸ்.ஐ., சீனிவாசன் மற்றும் போலீசார் அப்பகுதியில் திடீர் ஆய்வு செய்தனர். அப்போது குப்பைமேடு புதரில் ஒரு பேரலில் 100 லிட்டர் சாராயம் விற்பனைக்காக பதுக்கி வைத்து இருந்தது கண்டறியப்பட்டு பறிமுதல் செய்தனர். மேலும், சாராயம் காய்ச்சுவதற்கு பயன்படுத்தப்பட்ட மூலப்பொருட்கள், உபகரணங்கள் ஆகியவற்றையும் போலீசார் பறிமுதல் செய்தனர். அதோடு சாராயம் காய்ச்சிய சந்திரன் (52) என்பவரையும் கைது செய்தனர்.

Tags : ALCOHOL
× RELATED புறநகர் ரயில், மாநகர பேருந்து, மெட்ரோ...